தமிழ் சினிமா உலகில் இன்றைக்கு எத்தனையோ பல இளம் புதுமுக நடிகர்கள் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையிலும் அவர்களுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து பல வருடங்களாக ஹீரோவாக நடித்து உலகளவில் பல ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 2005-ம் ஆண்டு இவரது நடிப்பில் பிரபல இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியாகி அமோக வரவேற்பையும் வசூல் சாதனையையும் செய்த

படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேல் என முன்னணி நடிகர் பட்டாளமே நடித்து இருப்பார்கள். அந்த வகையில் இந்த படத்தில் வடிவேலுவின் மனைவியாக சொர்ணம் எனும் கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை சுவர்ணா மாதிவ். இவர் முதன் முதலில் தமிழில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான தாய் மனசு எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் இந்த படத்தை தொடர்ந்து மாயாபஜார், கோகுலத்தில் சீதை, வர்ணஜாலம், பெரியதம்பி, ரோஜாகூட்டம்,

திருப்பதி உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் குணசித்திர காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு குடுமபத்தை கவனிப்பதில் செட்டில் ஆகி விட்டார். இந்நிலையில் இவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் அவ்வளவாக

படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுவர்ணா அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை மோககடலில் மூழ்கடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் இன்னமும் கொஞ்சமும் வயசாகமா அப்படியே கும்முன்னு இருக்காங்களே என வர்ணித்து வருகின்றனர்….

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here