நம் வாழ்க்கையில் பயன்படுத்தும் பல பொருட்களை கொண்டு பல பொருட்களை நம்மால் புதுபிக்க முடியும் அந்த வகையில் நாம் தினந்தோறும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்டை கொண்டு வெள்ளி பொருட்களை சுத்தம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமா?

வெள்ளி நகைகள் பளிச்சிட

வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.

அயர்ன் பாக்ஸ் கறை நீங்க

வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல் ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துருவை நீக்கி விடும்.

கனமான கறைகளை நீக்க

துணிகளிலும், கார்பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும். குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்துவிடும்.

மூக்கு கண்ணாடியை துடைக்க 

நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here