தற்போது இணையம் வளர வளர தனது நடிப்பு திறமையை காட்டி பல பிரபலங்களும் சின்னத்திரி மற்றும் வெள்ளித்திரை பட வாய்ப்புகளை பெறுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி புதிது புதிதான திறமைகளை நாள்தோறு சின்னத்திரையில் பார்த்து வரும் நிலையில் இணைய பிரபலங்கள் பலரும் தற்போது சின்னத்திரையில் கலக்குகின்றனர். இப்படி முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் ளவிற்கு தற்போது பல இணைய பிரபலங்களும் சின்னத்திரியில் கலக்கி வருகின்றனர்.

இப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் சுந்தரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் தனது நடிப்பின் மூலம் ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமானவர். அதனால தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

முதலில் இவரது நடிப்பை பார்த்த பலரும் ஓவர்ஆக்டிங் ஆக இருப்பதாக கூறி வந்தனர். அதற்கு கூட கேப்ரில்லா எனக்கு நடிப்பின் மீது ஆசை இருக்கிறது. அதனால் மற்றவர்கள் பார்வையில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கா தெரியும் என அதற்கு பதிலளித்தார்.

தற்போது இந்த சீரியலில் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சுந்தரி தனது கணவனிடம் சண்டை போட்டுள்ளார். அதன்பிறகு தனது கணவன் மீது கடும் கோபத்தில் ஒரு சில முயற்சிகளைச் செய்து அவரை பழி வாங்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால் கேப்ரில்லா ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். தற்போது கேப்ரில்லா ஒரு சில குறும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்கூட நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது ஒரு சில குறும் படங்களில் தயாரித்து நடித்து வருகிறார். மேலும் நடிப்பு பள்ளிக்கூடம் ஒன்றை வைத்து பலருக்கும் நடிப்பு கற்றுக்கொடுத்து வருகிறார். சுந்தரி சீரியலில் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது, அதனால் சுந்தரி சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here