முன்பெல்லாம் திரைபபட நடிகைகள் திரைப்படங்களுக்காகவும் அல்லது மார்க்கெட் பொய் விட கூடாது என்பதற்காகவும் தனது உடல் எடையை குறைத்தும் ஏற்றியும் கட்டழகுடன் இருக்க எண்ணுவார்கள் அனால் தற்போது சின்னத்திரை நடிகைகளும் திரைபபட நடிகைகளுக்கு போட்டியாக உடல் எடையை குறைத்து ஆச்சர்யப்படுத்தி வருகின்ற்றனர் . இப்படி வெள்ளித்திரை போன்றே சின்னத்திரைக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. ஆகையால் சின்னத்திரையிலும் கிடைக்கும் வாய்ப்புகளை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ள நடிகர் நடிகைகள் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


அந்த வகையில் தன்னுடைய 15வது வயதில் இருந்து தற்போது வரை, சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தான் கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் டிவியின் பிரபலமான சீரியல் ஆன மெட்டி ஒலியில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து ஆனந்தம், ஆடுகிறான் கண்ணன், செல்லமே, கணவனுக்காக, முந்தானை முடிச்சு உள்ளிட்ட சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அதன்பின் திருமணமாகி குழந்தை பிறந்ததும் ‘மரகத வீணை’ என்ற சீரியலில் மீண்டும் தனது பயணத்தை தொடங்கினார்.

இருப்பினும் 86 கிலோ உடல் எடையால் அவதிப்பட்டு கொண்டிருந்த கிருத்திகாவிற்கு சீரியலில்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது. அதன்பின் கிருத்திகா உடற்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றை ஆறு மாதங்களாக கடுமையாக பின்பற்றி, 86 கிலோவிலிருந்து தன்னுடைய உடல் எடையை 63 கிலோ உடல் எடையாக குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

மேலும் கீர்த்தனா, கடந்த 2012 முதல் தற்போது வரை ஒவ்வொரு வருடமும் தான் எப்படி இருந்ததாக வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான லைக்குகள் குவிகிறது, தற்போது கிருத்திகா மீண்டும் இளம் நாயகியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டவர் இல்லம்’ என்ற சீரியலில் மூத்த மருமகளாக ரேவதி என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here