பொதுவாக சினிமாவில் நடிக்க ஏங்கும் பல நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனென்றால் தற்போது சினிமாவில் பல புதுமுக நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டே இருப்பதால் சில முன்னணி நடிகைகளுக்கு கூட வாய்புகள் குறைந்து வருகிறது. இதனால் வாய்புகள் தேடும் நட்சத்திரங்களுக்கு எந்த ஒரு ஆதாயமும் கிடைக்காமல் தான் போகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சின்னத்திரை டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகை ஒருவர் சமீபகாலமாக இளம் நடிகர்களை மிகவும் அரவணைத்து கொஞ்சி குலாவி கொள்வதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசு கிளம்பியுள்ளது.

டிவியிலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் அந்த நடிகை. அதன் பிறகு ஒரு காதல் காமெடி கலாட்டா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பார்ப்பதற்கு நல்ல உயரமாகவும், கொலுத்த தேகத்துடனும் கன்னக்குழி சிரிப்புடனும் காந்த பார்வை கொண்ட நடிகையாக இருப்பார். பார்த்த உடனே பக்குன்னு  பிடித்துப் போகும் அந்த நடிகைக்கு தொடர்ந்து முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு படவாய்ப்புகள் குவிந்தது என்னவோ. லேகின்ஸ் ஆடைகளை விரும்பும்  அத்துடன் மாடர்ன் காட்டும் நடிகைகளுக்கே பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஹோம்லி கேரக்டரில் நடிக்கும் இவருக்கு எப்படி இவ்வளவு படவாய்ப்புகள் என விசாரிக்கத் தொடங்கியது எட்டு  பேர் கொண்ட குழு.

அப்போதுதான் அந்த நடிகையின் வண்டவாளங்கள் தண்டவாளங்களில் ஏற ஆரம்பித்தது. தன்னுடன் நடிக்கும் இளம் நடிகர்களுடன் ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்குவதில்  இருக்கிறாராம் அந்த மாய வித்தை கொண்ட  நாயகி. அந்த இளம் நடிகர்களுடன் போன் செய்வது, சேட் செய்வது என எப்போதுமே தொடர்பில் இருக்கும் அந்த நடிகையை தங்களுடைய படங்களில் நடிக்கவைக்க இளம் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.

இதன் காரணமாகவே தற்போது அம்மணிக்கு அளவுக்கு அதிகமான படங்கள் கையில் இருக்கின்றன. ஏற்கனவே 10 படங்கள் நடித்து முடித்துவிட்டார், இன்னும் பத்து படங்கள் கையில் இருக்கின்றன. டிவி நடிகையின் இந்த சாமர்த்தியத்தைப் பார்த்து மற்ற நடிகைகள் பொறாமையில் பொங்குகிறார்களாம். தற்போது பட வாய்ப்புகளை பெற வேண்டுமானால் பல சூச்சமம் தெரிந்து  இருப்பது அவசியமோ என்னவோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here