தென்னிந்திய சினிமாவிற்கு இது கேட்ட நேரமோ என்னமோ பல முன்னணி பிரபலங்களும் நடிகர் நடிகைகளும் பல சர்ச்சைகளிலும் கிடுகிசுக்களிலும் அடிக்கடி சர்ச்சைகளில் கிசுகிசுக்களில் சிக்கிகொல்கிரார்கள் என்றே சொல்ல வேண்டும் . பாலிவூட் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் இது போன்ற பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் குறைவாகவே வந்தது என்றே சொல்லலாம். ஆனால் தற்போது பல முன்னணி நடிகர்களே காதல் விவகாரங்களிலும் விவாகரத்துகளிலும் சிக்கிகொல்கிரார்கள்.

இப்படிதென்னிந்திய சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக வலம் வந்தவர்கள் சமந்தா, நாக சைதன்யா. சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் தங்கள் நான்கு வருட திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறுவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தனர்.இதனால் சினிமா உலகம் உட்பட அவர்களின் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களின் விவாகரத்துக்கான காரணம் என்ன என்று ஊடகங்களில் பல செய்திகள் வெளியானது. ஆனாலும் இது குறித்து அக்கினேனி குடும்பத்தினர் எந்த பதிலும் அளிக்காமல் அமைதி காத்தனர்.

இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா தனது மகன் நாக சைதன்யா இந்த விவாகரத்து பிரிவை எப்படி சமாளித்தார் என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது இந்த விவாகரத்து விஷயத்தை நாக சைதன்யா மிகவும் அமைதியாக கையாண்டார்.எல்லா அப்பாவையும் போலவே நானும் அவரை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் அவர் எங்களை பற்றி அதிகம் கவலைப் பட்டார். இந்த சமயத்தில் நானும் என் குடும்பமும் அவருக்கு ஆதரவாக இருந்தோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த விவாகரத்து முழுக்க முழுக்க சமந்தாவின் முடிவு மட்டுமே. அவர்தான் இந்த விவாகரத்துக்கு மிகவும் ஆசைப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஊடகங்களில் சமந்தா திரைப்படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருவது தான் இந்த விவாகரத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது.

தற்போது நாகார்ஜுனாவின் இந்த பதிவை வைத்துப் பார்க்கும்போது இந்த விவாகரத்து முடிவு சமந்தாவால் மட்டுமே எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் வேறு வழியில்லாமல் நாக சைதன்யாவும் அதற்கு சம்மதித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. நாகா சைதன்யா ஒரு முறை சமந்தாவின் மகிழ்ச்சி எனக்கு ரொம்ப முக்கியம் என்று கூறியிருந்தார். அதனால் தான் இந்த விவாகரத்து மூலம் அவர் சமந்தாவின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here