இந்திய சினிமாவை தாண்டி உலகளவில் தனது இசையால் பலரது மனதை கொள்ளை கொண்டதோடு பல விருதுகளையும் பதங்கங்களையும் தன் வசம் சொந்தமாக்கி வைத்திருப்பவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் இவரது குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வு குறித்து தனது தனியார் யூடுப் சேனலில்

போட்டுடைத்துள்ளர் பிரபல சர்ச்சை நாயகன் பயில்வான் ரங்கநாதன். தொடர்ந்து பல முன்னணி சினிமா பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி வருவதோடு சமீபகாலமாக பல நடிகைகளை பற்றி அவதூறாக பேசி செமையாக வாங்கி கட்டி கொண்டாலும் பயில்வான் தனது கொள்கையில் பின்வாங்குவதை இல்லை போலும். அந்த வகையில் தற்போது ஏஆர் ரஹ்மான் அவர்களின் தங்கையை குறித்த பல தகவல்கள் கூறியுள்ளார். அதில் ஏஆர்

ரஹ்மானின் தங்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல சினிமா விமர்சகர் இணையவாசி பிஸ்மி காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து விட்டு தனது தேவை ,முடிந்ததும் பாதியிலேயே கழட்டி விட்டு விட்டதாக பகிரங்கமான குற்றசாட்டை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். இந்த தகவல் வெளிவர காரணமே பிஸ்மி அவர்கள் பயில்வான் ரங்கநாதன் குறித்து பேசியதே ஆகும். அதன் படி ரங்கநாதன் தனது பேட்டியில் கூறுகையில் பலரை பற்றி நான்

அவதூறாக பேசுவதாக கூறும் நீங்கள் செய்த காரியத்தை கொஞ்சம் யோசித்து பாருங்கள் அப்பறம் என்னை பற்றி பேசலாம் என கூறியுள்ளார். அது இல்லாமல் இப்படிப்பட்ட ஒருவர் என்னை பற்றி பேச துளியும் தகுதி இல்லாதவர் என மிகுந்த கோபத்துடன் கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here