தமிழ் சினிமாவில் நடிகைகள் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளார்கள் அவர்களுக்கு இணையாக அவர்களுடன் நடிக்கும் தோழிகளும் மக்கள் மத்தியில் பிரபகமாகி வருகின்றனர். அந்த வகையில் வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைபடத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு ஷம்முவை அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும்.இவர் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக வந்திருப்பார். மேலும் அந்த படத்தில் அவரது நகைச்சுவையான நடிப்பு மற்றும் யதார்த்தின் காரணமாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள ஷாலு 1998-ம் ஆண்டு  தல அஜித்குமார் நடிப்பில்  வெளியாகி பலத்த வெற்றியையும் வசூலையும் பெற்று தந்த காதல் மன்னன் திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,மிஸ்டர் லோக்கல், தெகிடி, மான் கராத்தே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவர் படங்களில் நடித்ததை காட்டிலும் சமுக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டடதன் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமனதோடு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் கவர்ந்தார். இந்நிலையில் ஷாலு கடந்த சில வாரங்களுக்கு முன் தனது ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு வீடியோக்கள்  வெளியிட்டு வைரலானர். சினிமா வட்டாரங்களில் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவது என்னவோ பட வாய்ப்புகளுக்கு தான் என்பது அறிந்த ஒன்றே.ஷாலு இறுதியாக இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என்ற அடல்ட் படத்திலேயே நடித்திருந்தார்.இப்படி இருக்கையில், சினிமாவில் பெரிய படங்களில் நடிக்க வேண்டும் என்றால் அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து தனது இணைய பக்கத்தில்,பெரிய நடிகர்களின் படங்களில் காம்பரமைஸ் செய்து கொள்ள தவறினால் அவர்களின் திறமை நிரகரிக்கபடுகிறது என்று பதிவிட்டுள்ளார். ஸ்ரீ ரெட்டியினால் உருவாக்கப்பட்ட மீடு பற்றி தெரியாதவர்கள் மட்டும் அதில் மாட்டதவர்களும் இருக்க மாட்டார்கள்.அந்த வகையில் ஷாலுவும் மீடுவில் புகார் அளிப்பது இது முதன் முறை அல்ல. கடந்த 2019-ம் ஆண்டு ரசிகர் ஒருவர், நீங்கள் மீடுவில் பாதிக்கபட்டுள்ளீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார்.

அதற்க்கு பதில் அளித்த ஷாலு, விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிப்பதற்கு பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதனை தான் வெளியில் சொல்லவில்லை எனவும் கூறியிருந்தார்.மேலும் மீடுவில் புகார் அளித்தபின் பல பட வாய்ப்புகளை தான் இழந்ததாக ஷாலு புலம்பி இருந்தார். இவ்வாறான நிலையில் தற்போது மீண்டும் புகார் அளித்துள்ள ஷாலுவின் திரை வாழ்க்கை என்னாகுமோ என அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். என்னமா நீங்க இப்படி பண்றீங்கலேமா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here