கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இந்த வகையில் டிசம்பர் 27ஆம் திகதி செவ்வாய் தனது ராசியை மாற்றி விருச்சிக ராசியிலும், டிசம்பர் 31ஆம் திகதி குரு பகவான் வியாழன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார்.

கிரகங்களின் இந்த மாற்றங்கள் வெவ்வேறு ராசிகளிலும் தாக்கம் செலுத்தும் சில ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறபோகும் அதே நேரம்  சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய மாதமாக டிசம்பர் மாதம் காணப்படுகின்றது. எந்த ராசியினருக்கு என்ன பலன் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.டிசம்பர் மாத ராசிபலன்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சிறப்பாக இருக்காது. கிரகங்களின் நிலை இந்த ராசிக்காரர்களை பாதித்து தீய எண்ணங்களுக்கு ஆளாக நேரிடும். உங்களுக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்படலாம்.அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

இந்த ராசிக்காரர்கள் டிசம்பர் மாதம் வியாபாரம் போன்றவற்றை செய்யும் முன் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். இந்த மாதத்தில் புதிய தொழில் தொடங்கம் விடயங்களில் அதிக கவனத் தேவை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். டிசம்பர் மாதத்தில், சூரியனின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும். மிதுன ராசிக்காரர்களின் உடல்நலக் கோளாறுகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இந்த ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரகங்களின் நிலை காரணமாக, இந்த ராசிக்காரர்கள் கடுமையான நோய்களால் பாதிக்கப்படலாம்.

சிம்மம்

இந்த ராசிக்காரர்கள் எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதத்தில், புதிய எதிரிகள் உருவாகலாம் அல்லது பழைய எதிரிகளால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு செயலையும் மிகவும் சிந்தனையுடன் செய்ய வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் நல்லது. இந்த ராசிக்காரர்கள் செல்வம், செழிப்பு போன்றவற்றை அடையலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் இந்த மாதத்தில் முடிவடையும்.

துலாம்

கிரகங்களின் அரசனான சூரியன் வரும் டிசம்பர் 16ஆம் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கப் போகிறார், ஜனவரி 15ஆம் தேதி வரை தனுசு ராசியில் இருப்பார். இந்த ராசிக்காரர்கள் செல்வச் செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு, இந்த ராசிக்காரர்களும் நன்மைகளைப் பெறுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் வேதனை தரும். இந்த ராசிகளுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற பண விரயம், சட்டச் சிக்கல்கள் வரலாம். இந்த ராசிக்காரர்கள் இந்த மாதம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தனுசு

டிசம்பர் மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். இந்த மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும், ஆனால் டிசம்பர் 16க்கு முன் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் வரலாம். உடல்நலம் தொடர்பான புகார்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்டம் கிடைக்கும். செல்வமும் வளமும் பெருகும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கலாம். இதனால் பொருளாதார பிரச்சனைகள் தீரும், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

 

கும்ம்

கும்ப ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும். கும்பம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத் துறையில் இருந்து வந்த பிரச்சனைகளும் விலகும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமண வாழ்வில் இனிமை இருக்கும்.மன குழப்பங்கள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். நோய்களை சந்திக்க நேரிடலாம். இந்த மாதத்தில் உடல் நலம் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும்.