பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகின்றது.

இதன்படி, இன்னும் ஒரு மாதத்தில் பிறக்கவுள்ள புதுவருடம் குருவால் ஆளப்படும், இதனை ஜோதிடர்கள் கிரகங்களின் சேர்க்கையை அடிப்படையாக கொண்டு கணித்துள்ளனர்.

இதனால் குறிப்பிட்ட சில ராசிகளின் எதிர்காலம் அடுத்த வருடம் முதல் பிரகாசமாக இருக்கும்.

மேலும் சனி கும்ப ராசியில் பயணிப்பார், இது தவிர சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் பல சுப, அசுப யோகங்களை உருவாக்கும்.

அந்த வகையில் புதுவருடம் யாருக்கு எப்படி அமையபோகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதுவருடம் எப்படி இருக்கும்?

1. மேஷம்: 2024-ம் ஆண்டில் திருமண வாழ்க்கை கைகூடும். குழுந்தை இல்லாதவர்கள் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். பிரிவு என்பது யாருக்கும் இந்த வருடம் கிடையாது.

2. ரிஷபம்: மே இறுதி வரை செழிப்பு மற்றும் ஆடம்பரங்கள் அதிகமாக இருக்கும். இந்த வருடம் முழுவதும் அதிஷ்டமாகவே இருக்கும்.

3. மிதுனம்: 2024 ஆம் ஆண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு வெற்றி வரும். திருமணம், குழந்தை, குடும்பம், உடல் நலம் ஆகியவற்றில் நல்ல மாற்றம் கிடைக்கும்

4. கடகம்: ஏப்ரல் வரை கொஞ்சம் இன்னல்கள் வரும். அதன் பின்னர் நீங்கள் முயற்சி செய்தால் மற்ற ராசிகளை பின்வாங்க வைக்கலாம்.

5. சிம்மம்: பணம் மற்றும் பங்குசந்தை முதலீடுகள் ஆகியவற்றில் அதிக கவனம் தேவை. தொழிலில் வாய்ப்புகள் அதிகமாக வரும் காத்திருங்கள்!

6. கன்னி: பிரச்சினைகள் இல்லாத அமைதியான வாழ்க்கை கிடைக்கும். ராகு, கேதுவால் ஆரோக்கிய பிரச்சினைகள் வரக்கூடும்.

7. துலாம்: வியாபாரம், சொத்து விற்பனைஇவற்றில் அதிக இலாபம் கிடைக்கும். துணைக்கான செலவுகள் குறைய ஆரம்பிக்கும்.

8. விருச்சிகம்: தங்கம் விற்பனையில் இருப்பவர்கள் இந்த ஆண்டு இன்னும் வளர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் பெரிய சாதனைகளை அடையலாம். உறவு ஆரோக்கியமானதாக மாறும்.

9. தனுசு: பண மழை பொழியும். வாழ்க்கையில் இருந்த அனைத்து பிரச்சினைகளும் இந்த ஆண்டு உங்களுக்கு இருக்காது. 10. மகரம்: சனியால் அதிஷ்டம் கிட்டும். பணம், பதவி, உறவு என செழிப்பாக வாழ்வீர்கள்.

11. கும்பம்: சமூகத்தில் சிறந்து விளங்கப்படுவார்கள். புதன் சேர்க்கையால் அதிஷ்டம் கிட்டும்.

12. மீனம்: உறவுகளில் இருக்கும் சிக்கல்கள் மறையும். காதல் வாழ்க்கை கைக்கூடும். இந்த ஆண்டின் கடைசி வெற்றியாளனாக இருப்பீர்கள்.