தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைதிருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இந்நிலையில் இவரது நடிப்பில் தெலுங்கு முன்னணி இயக்குனரான வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வெளியாகி உலகமெங்கும் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில்  முழுக்க குடும்ப கதையை மையமாக வைத்து இருப்பதோடு அதிகளவில் செண்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்று இருக்கும் நிலையிலும் படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இந்த

படத்தில் விஜயின் பாடல்கள் மற்றும் நடனம் வேற லெவலில் ஹிட்டடிதுள்ளது. இப்படி ஒரு நிலையில் விஜயுடன் நடனம் ஆட பல நடிகைகளும் தயக்கம் காட்டும் அளவிற்கு அவரது நடனம் மிரட்டலாக இருக்கும். இப்படி ஒரு நிலையில் இவருடன் குத்து பாடல் ஒன்றிற்கு நடனமாடிய பிரபல நடிகை ஒருவர் பல சுவாரசியமான தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து பல இளசுகளின்

மனதை கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி நடிகை மாளவிகா. இவர் திரையுலகிற்கு அறிமுகமான சில வருடங்களிலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் அம்மினிக்கு பட வாய்ப்புக்கள் குவிய தொடங்கியது இருப்பினும் ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை தாண்டி கில்மா காட்சிகளில் மட்டுமே அதிகளவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனைதொடர்ந்து பிசியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை

காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சினிமாவில் நடிப்பதை குறைத்து வந்த மாளவிகா இறுதியாக கோல்மால் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மாளவிகா, நான் தளபதி விஜய் அவர்களுடன் குருவி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் போது அப்போது நான் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தேன். அதோடு என்னை மருத்துவர்கள் டான்ஸ் ஆடவே கூடாது என கூறிய நிலையில் டான்ஸ் மாஸ்டர் எனக்கு துளியும் கஷ்டமே இல்லாத ஸ்டெப்பை கொடுத்து இருந்தார். நான் கர்ப்பமாக மட்டும் இல்லை என்றால் அந்த பாடலில் நான் இன்னும் சிறப்பாக ஆடியிருப்பேன் என கூறியுள்ளார்………