நடிகர் ராஜசிம்மன்

பெரும்பாலான மாஸ் நடிகர்கள் பெரும்பாலும், சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், அஜித், சூர்யா, கார்த்தி, ஜிவி பிரகாஷ், விஜய் என்று மாஸ் நடிகர்களை குறிப்பிடலாம். இவர்களையும் தாண்டி ஒரு வில்லன் தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருவது எத்தனை பேருக்கு தெரியும்.

ராஜசிம்மன் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திமுக ராஜ சிம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். தென்னிந்தியாவில் பிறந்தவர். தமிழ் திரையுலகில் அவர் தனது கதாபாத்திரங்களால் வில்லனாக அறியப்படுகிறார். ராஜா தனது வாழ்க்கையை 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கினார்.

அவர் என்னை அறிந்தால் (2015) மற்றும் கொடி (2016) போன்ற சில பிளாக்பஸ்டர் திரைப்படங்களிலும் அஜித் குமார், தனுஷ், கவுதம் மேனன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி போன்ற கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

வாழ்த்துக்கள்

ஆம், நாம் அன்னதானம் கொடுப்பது என்றால் குறைந்தது ஒரு நாளைக்கு இல்லையென்றால் 2 நாளைக்குகொடுப்போம். ஆனால், இதனையே தனது தினந்தோறும் பணியாகவே ராஜசிம்மன் செய்து வருகிறார். படங்களில் நடிப்பதைத் தவிர தன்னால் முடிந்த அளவிற்கு சமையல் செய்து தினமும் 100 பேரின் பசியை போக்கி வருகிறார்.

இதன் மூலம் அவர் ரசிகர்கள் ஹீரோவாகவே திகழ்கிறார். இவர் இப்படி இருக்கும் போது பிகில் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த டேனியல் பாலாஜி ஆவடி அருகில் ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டியுள்ளார். நான் உயிரோடு இருக்கும் வரை தினமும் செய்வேன் என கூறியுள்ளார்.