விஜயகாந்த்

திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த். இவர் கடந்த 1952 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் கிராமத்தில் பிறந்தார். அதனைத் தொடர்ந்து, இவரது குடும்பம் சிறுவயதிலேயே மதுரைக்கு குடி பெயர்ந்தது.

மதுரையில் வளர்ந்த விஜயகாந்த் சினிமா மீது மோகம் கொண்டு படிப்பின் மீது ஆர்வம் காட்டாமல், தந்தையின் கண்காணிப்பில் இயங்கி வந்த அரிசி ஆலையில் சிறு சிறு பணிகளை செய்து வந்தார்.

பின்பு சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடி திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கியுள்ளார். கடந்த 1990-ல் பிரேமலதாவை திருமணம் செய்த விஜயகாந்துக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சினிமா வாழ்க்கையில் இருந்த விஜயகாந்துக்கு அரசியலிலும் வரவேற்பு

இருந்தமையால், 1993-ல் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டு பலரும் வெற்றி அடைந்தனர். இதனால் விஜயகாந்துக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தாலும், அவ்வப்போது அதனை தெரிவித்தும் வந்தார். ஆனால் முழு நேர அரசியல் களமிறங்கவில்லை.

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த்தின் மறைவு செய்தி கேட்டு தேமுதிக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.

புகைப்படம்

இப்படி பட்ட ஒரு நிலைமையில் ஷண்முக பாண்டியன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன் வெளிநாட்டு மனைவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த பலருமே இவர் தான் விஜயகாந்த் மருமகளா. அந்த பெண் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்,

அவர் ஷண்முக பாண்டியனுடன் படித்தவர் என்றும் தெரிகிறது.இதைக்கண்ட ரசிகர்கள் இந்த பெண்ணை தான் ஷண்முக பாண்டியன் திருமணம் செய்ய போகிறாரோ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.