பிரேம்ஜி

காமெடி நடிகரும்,பின்னனி பாடகருமான பிரேம்ஜி தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர் ஆவார். வெங்கட்பிரபு இயக்கும் எல்லா படங்களிலும் அவரது சகோதரர் பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேம்ஜி,  சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த வல்லவன் திரைப்படத்தில் காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் சென்னை 600028, சரோஜா, கோவா போன்ற படங்களில் நடித்து இவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இறக்கிறார்.

இவர் பேசிய ‘என்ன கொடுமை சார் இது’  ‘எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா’ போன்ற டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் 40 வயதாகியும் திருமணம் ஆகாதநிலையில் பிரேம்ஜிக்கு அவரது பெற்றோர்களும், நண்பர்களும் நீண்ட காலமாக மிகவும் தீவிரமாக பெண் தேடிவந்தனர்.

யாருன்னு பாருங்க இதனை அடுத்து சமீபத்திய புத்தாண்டு போஸ்டில் கூட இந்த வருடம் கண்டிப்பாக எனக்கு திருமணம் நடந்து விடும் என்ற பதிவை பதிவிட்டு இருக்கிறார். மேலும் இவர் திருமணம் செய்து கொள்ளக்கூடிய பெண்ணிடம் தன் காதலை சொல்லி இருக்கிறார். அதுவும் அந்த பெண்ணின் வயது வெறும் 24 தான்.

அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்லிவிட்டார். ஏற்கனவே ரெடின் கிங்ஸ்லி சங்கீதாவை திருமணம் முடித்த நிலையில் பிரேம்ஜிக்கும் 24 வயது பெண் கிடைத்திருக்கின்ற வகையில் ரசிகர்கள் கவலையில் மூழ்கி விட்டார்கள்.அந்தப் பெண் நடிகையாக இருந்தால் கட்டாயம் பிபி மட்டுமல்லாமல் எல்லாமே எகிரும் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.