தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருவதை தாண்டி உலகளவில் ஹாலிவுட் லெவலில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் பல படங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு இவரது நடிப்பில் வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி

வெற்றிகரமாக ஓடி வருவதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்து வருகிறது. இவ்வாறு பிரபலமாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையிலும் இவரது குடும்ப வாழ்க்கை என்னமோ கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது எனலாம். காரணம் நடிகர் தனுஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து

கொண்டர்ட் இதையடுத்து இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா எனும் இரு மகன்கள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக பதிவிட்டு இருந்தார் இதனைதொடர்ந்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிரபல விமர்சகர் உமர் சந்து

தனது இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை போட்டுள்ளார் அதில்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் உடன் விவாகரத்து கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளதாகவும் அதற்கான காரணமாக அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………..