தற்போது சினிமாவில் பல இளம் நடிகர்களும் ஹீரோவாக அறிமுகமாகி படங்களில் நடித்து வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக வெகுவாக மக்களை கவர்ந்து தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூது கவ்வும் படத்தின் மூலமாக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர்

பிரபல நடிகர் அசோக் செல்வன் . இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது ஹீரோவாக பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து ஒ மை கடவுளே, மன்மதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் போனர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் கூட நித்தம் ஒரு வானம் படத்தில் சிறப்பாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம்

திரும்பி பார்க்க வைத்திருந்தார் இப்படி இருக்கையில் இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அது குறித்து விசாரிக்கையில் நடிகர் அசோக் செல்வன் கடந்த சில வருடங்களாக பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான பிரபலத்தின் மகளை காதலித்து வருவதாகவும் இவர்களது காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில்

திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் அவர்களது பக்கத்தில் இருந்து வராத நிலையில் இந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……….