தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் தனது சம்பளத்தை வாங்கி வருகிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமந்தா மையோசிடிஸ்

எனும் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார் இப்படி இருக்கையில் அந்த நோயின் தாக்கம் அதிகமானதை அடுத்து சில காலம் சினிமாவில் ஏதும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த நோயில் இருந்து குணமாகி வரும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமந்தா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள

இருப்பதாக தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் ,மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து

வருகின்றனர். இந்நிலையில் இஷா யோகமையத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட அவர் அதன் குருஜி ஆன ஜக்கி வாசுதேவ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இருப்பினும் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகத நிலையில் இந்த தகவல்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது………..