தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி பிரபலங்களும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல முன்னணி நடிகை ஒருவர் தனது 44 வயதில் திருமணம் முடிவு செய்துள்ள நிகழ்வு மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . அந்த

வகையில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகை மற்றும் தங்கை, தோழி என பல மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல நடிகை லாவண்யா தேவி. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த மாபெரும் திரைப்படமான

படையப்பா படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.  இந்த படத்தை தொடர்ந்து திருமலை, ரன், சமுத்திரம், சுந்தரா ட்ராவல்ஸ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் லாவண்யா கடந்த சில தினங்களுக்கு

திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பிரசன்னா என்பவரை திருப்பதியில் கரம் பிடித்துள்ளார் இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில் அங்கு எடுக்க்க்பட்ட பல புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனைபார்த்த பலரும் அவருக்கு திருமண வாழ்த்துகளை கூறி வருகின்றனர் …………..