தென்னிந்திய சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் சில படங்களிலேயே வெகுவாக தங்களது இளமையான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்  விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலமாக ஹீரோயினாக மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்து வருவதோடு முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பிரபல நடிகர் நாணி ஹீரோவாக நடிக்க கீர்த்தி சுரேஷின் மாறுபட்ட நடிப்பில் தசரா திரைப்படம்

வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் எனும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்டபோது கீர்த்தி சுரேஷ் அவரது நீண்ட நாள் நண்பர் ஒருவரை காதலித்து

வருவதாகவும் அவருடன் தான் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அண்மையில் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான பர்ஹான் பின் லியாகத் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைபார்த்த பலரும் இவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாரா என்பது போலான பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ……………..