பக்கத்தில் அளித்துள்ள பேட்டியில் பல சுவாரசிய தகவல்களை தேவதர்ஷினி பகிர்ந்துகொண்டுள்ளார்.

தேவதர்ஷினி தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகர்களே பெரிதாக கவனிக்கப்படாத நிலையில், துணை நடிகையாக இருந்தும் ரசிகர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றவர் தேவதர்ஷினி. முதலில் சின்னத்திரையில் நடித்து வந்த இவர், காஞ்சனா படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவில் பிஸியான நடிகையான மாறினார்.தமிழை தாண்டி தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் தற்போது அவர் முக்கிய பத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், இவர் ரம்யா சுப்ரமணியனின் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில், எனக்கு சில தேவைகள் இருக்கும், என்னுடைய கணவருக்கு சில தேவைகள் இருக்கும் ஆனால் அது இரண்டும் ஒத்துப் போகவில்லை என்று வைத்துக் கொண்டால், ஒருவருக்கொருவர் உட்கார்ந்து பேசி, அந்த தேவைகளில் எது நிறைவேறும், எது நிறைவேறாது என்று பார்க்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒருவர் நமக்கான எல்லாமாகவும் இருப்பது கடினம் என்றாலும், நமக்கான அத்தியாவசிய தேவை என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கிறது என்று கூறி, அதை முன்னிறுத்தி, எப்படி அதனை செயல்படுத்துவது என்று யோசிக்க வேண்டும் என்று கூறினார். அதில் நிறைவேறுவதையும், நிறைவேறாததையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் நமக்கு வேண்டும்.

ஆனால் அதில் நம்முடைய மிக முக்கியமான அத்தியாவசிய தேவை நிறைவேற வில்லை என்றால், நாம் யோசிக்க வேண்டும். நமக்கிருக்கும் அத்தியாவசிய தேவைகள் நம்முடைய கணவரிடமிருந்து கிடைக்காத பொழுது, இன்னொரு நபர் அதாவது அவர் நண்பராக கூட இருக்கலாம்? என்ற தேவதர்ஷினி, அவர் நமக்கான சில விஷயங்களில் உறுதுணையாக இருப்பது சரியா என்று பலரும் கேட்கிறார்கள்? என்றும் பேசினார்.