ஒரு சிறந்த கலைஞன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் முதலில் அவர் பயன்படுத்தும் இடம் சமூக வலைதளங்களாக தான் உள்ளது. அதில் தனது திறமைகளை வெளிக்காட்டி வைரலானால் அவர்களுக்கு வாய்ப்புகள் தேடி செல்கிறது. அப்படி சமூக வலைதளங்களில் மூலம் டிரெண்ட் ஆன ஒரு காமெடியன் தான் பிஜிலி ரமேஷ். ஒரே ஒரு ஃபன் வீடியோ மூலம் பிரபலமான இவர் முதன்முதலில் கோலமாவு கோகிலா படத்தில் தான் நடித்திருந்தார்.

கடைசியாக இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நாம் பார்த்திருப்போம். ஆனால் சமீபகாலமாக இவரை காணவில்லை. அண்மையில் இவர் தான் இப்போது எப்படி இருக்கிறேன் என பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், நான் சினிமாவில் லட்ச கணக்கில் சம்பாதித்தது போல் பேசுகிறார்கள். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துல 13ஆயிரம் வாங்குனேன், குக் வித் கோமாளில 15ஆயிரம் வாங்கினேன்.

கோலமாவு கோகிலா படத்திற்கு ப்ரோமோ கொடுத்தேன் அதில் தான் படத்திற்கு 20ஆயிரம் வாங்கினேன். சில படங்கள் எல்லாம் 3 அல்லது 5 ஆயிரம் தான் வாங்கினேன், அதுவும் 2 நாள் தான் போவேன். இதில் என்ன சம்பாதிக்க முடியும், குடித்துவிட்டு அழித்துவிட்டேன் என்கிறார்கள், இதில் என்ன சேர்த்து வைக்க முடியும் என சோகமாக பேசியுள்ளார்.

https://youtube.com/shorts/2ciAiOPdUuk?si=XEw0r22jXr8ECXH7