தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னனி நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சேது. மேலும் சொல்லப்போனால் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது எனலாம் இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை அபிதா.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளதோடு சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களில் நடித்துள்ளார். அதிலும் பிரபல முன்னணி தொடரான திருமதி செல்வம் தொடரில் நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் ஏற்படுத்தி கொண்டார். இந்த தொடரின் வெற்றியை

தொடர்ந்து பல தொடர்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சுனில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து தொடர்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனிப்பதில் அக்கறை காட்டி வந்தார். இதையடுத்து இவருக்கு இருமகள்கள் உள்ளார்கள் இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தொலைகாட்சி மற்றும் சோசியல் மீடியா பக்கமே வராமல் இருந்த

நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது கணவர் மற்றும் இரு மகள்களுடன் ஒன்றாக இருக்கும்படியான புகைப்படத்தை பதிவிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கா என வாயடைத்து போனதோடு விட்டா அழகுல அம்மாவையே ஓரம்கட்டிருவாங்க போல என வர்ணித்து வருகின்றனர்…….