தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வந்த நிலையில் இதன் காரணமாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் காலமாகி வருகின்றனர். அதிலும் சமீபகாலமாக இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு துயர நிகழ்வாக பிரபலம் ஒருவர் படபிடிப்பு தளத்திலேயே காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் அவர்களின்

மகனான சாந்தனு பாக்யராஜ் தனது சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது வளர்ந்த நிலையில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட இவரது நடிப்பில் முப்பரிமானம் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்ததை அடுத்து சாந்தனு தற்போது ராவண கோட்டம் எனும் படத்தில் நடித்து வருகிறார் இந்நிலையில் சாந்தனு தனது இணைய பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில், தனது பட உதவி இயக்குனரான ராமகிருஷ்ணா

என்பவர் காலமானதை அடுத்து அது குறித்து அந்த பதிவில், நேற்று எனது நண்பனை இழந்துவிட்டேன் 26 வயதே ஆகும் நிலையில் அவன் மிக திறமையான உதவி இயக்குனர் மேலும் அவனுக்கு எந்த விதமான தீய பழக்கங்களும் இல்லாத நிலையில் அவன் நன்றாக ஆரோக்கியமாக தான் இருந்தான் இருந்தும் அவனை கடவுள் சீக்கிரம் அழைத்துக்கொண்டார். அவன் கீழே விழுந்த சில நிமிடங்களில் இறந்து விட்டார் இதையடுத்து இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அவன் காலமாவதற்கு

முன்னர் எனது நம்பருக்கு கால் செய்துள்ளான் இருந்தும் என்னால் அந்த சமயத்தில் அந்த காலை எடுக்க முடியவில்லை. ஆகையால் வாழ்க்கையின் அடுத்த நிமிடம் நிச்சயமற்றது அதனால் அனைவரும் வெறுப்பு, ஈகோ எல்லாம் மறந்து மகிழ்ச்சியாக வாழ கற்றுகொள்வோம் என அதில் கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……