சின்னத்திரையில் பிரபல முன்னணி தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கியதை அடுத்து 106 நாட்களை கடந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெகு விமர்சையாக முடிவடைந்தது. இதையடுத்து இந்த சீசனில் இறுதி போட்டியாளர்களாக அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் இருந்த நிலையில் மக்கள் மத்தியில் அதிக

வாக்குகளை பெற்று அசீம் டைட்டில் வின்னராக தேர்வானார். பின்னர் முறையே இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்து இருந்தார்கள். இருப்பினும் அசீம் வெற்றிபெற்றதற்கு பலரும் தற்போது இணையத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் காரணம் பிக்பாஸ் வீட்டில் பலவிதமான சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த அசீமிற்கு வின்னர் ஆவதற்கு தகுதி இல்லை எனவும் இதற்கு தகுதியானவர் விக்ரமன் தான் எனவும் பலரும் தங்களது ஆதங்கத்தை கொட்டிதீர்த்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க விக்ரமன் குறித்த பல

சுவாரசியமான தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வருகிறது அதன்படி பிரபல அரசியல் பிரமுகர் ஆன விக்ரமன் அரசியலில் ஈடுபடும் முன்னரே பல முன்னணி சீரியல்களில் நடித்துள்ளதோடு விஜய் டிவியில் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி உள்ளார் அதன்படி நீயா நானா, குற்றமும் பின்னணியும் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த விக்ரமன் நேராக தனது அலுவலகத்துக்கு சென்று அண்ணல் அம்பேத்கர் அவர்களது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு இனி எனது புரட்சி மக்களுக்கானது எனவும் எனது முதல் காதல் அரசியல் தான் எனவும் ஆறாம் வெல்லும் என கூறியுள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……