தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான பல இளம் புதுமுக நடிகர்கள் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை மாஸ் ஹீரோவாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் அண்ணாத்தா திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த

படத்தை தொடர்ந்து ரஜினியின் மகளும் முன்னணி இயக்குனருமான சௌந்தர்யா இயக்கத்தில் வெளியாகவுள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த படத்திற்கு எழு நாட்கள் கால்சீட் ஒதுக்கியுள்ள நிலையில் அடுத்த படமாக பிரபல முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்துடன் இணைந்து நடிக்க

இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் பல சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது அந்த வகையில் தளபதி விஜய் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பலத்த ரசிகர்களில் ஒருவர் என்பது நமக்கு நன்கு அறிந்த ஒன்றே. இப்படி இருக்கையில் ரஜினியுடன் இணைந்து விஜய் நடித்துள்ளார் என்றால்

உங்களால் நம்ப முடியுமா ஆம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தளபதி விஜயின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ் ஏ சி இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றி திரைப்படமான நான் சிகப்பு மனிதன் படத்தின் முதல் காட்சியிலேயே தளபதி விஜய் நடித்துள்ளார். இருப்பினும் இதை நாம் யாரும் அவ்வளவாக கவனித்திருக்க மாட்டோம் இந்நிலையில் அவரது ரசிகர்கள் தற்போது அந்த காட்சியின் வீடியோவை இணையத்தில் வெளியிட்டதை அடுத்து செம வைரளாகி வருகிறது…….