தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதை தாண்டி உலகளவில் ஹாலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் உட்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகவுள்ள வாத்தி

படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து தனுஷ் அவர்கள் இந்த விழாவில் தனது இரு மகன்களுடன் ஒன்றாக கலந்து கொண்டார் இருந்தும்  அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இவர் குறித்த பல தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ் அவர்கள் தனது இணைய பக்கத்தில் தனது

மனைவியும் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ய போவதாக பதிவிட்டு இருந்தார். இதனைதொடர்ந்து இருவருக்குள்ளும் இன்றளவும் பனிப்போர் நடந்து வரும் நிலையில் ஐஷ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது பட வேலைகளில் பிசியாக இருந்து நிலையில் ஐஷ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜிம்மில்

வொர்கவுட் செய்வது மட்டுமின்றி சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அவர் தனது ஜிம் பார்ட்னராக பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவை வைத்துள்ள நிலையில் அவருடன் ஜிம் வொர்கவுட் செய்யும் வீடியோ வெளியிட்டு அதில் பிரபு தேவா அண்ணன் ரப்பர் மனிதன் எனவும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வீடியோ மற்றும் பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தி வருகிறது……