பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் இசையை மையமாக கொண்ட இந்த போட்டியில் பலரும் கலந்து கொண்டு வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கிராமபுற பாடல்களை

பின்னணியாக கொண்டு கணவன் மனைவி இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களது பாடல் திறமையால் பலரது மனதையும் வெகுவாக கொள்ளை கொண்டதோடு தனி பிரபலத்தையும் ஏற்படுத்தி கொண்டவர்கள் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி . இதையடுத்து அந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றதோடு திரையுலகிலும் பலத்த பிரபலத்தை அடைந்ததை அடுத்து சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல பாடல்களை பாடி வருகின்றனர் . இந்நிலையில்

தற்போது இருவரும் வேற லெவலில் பிரபலமானதை அடுத்து தொடர்ந்து பல படங்கள் மற்றும் வெளிநாடு மேடை நிகழ்ச்சிகள் என செம பிசியாக இருந்து வருகின்றனர் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் செந்தில் ராஜலக்ஷ்மி அவர்களது குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து இவர்கள் இருவரும்

காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மகன் மற்றும் மகள் ஒருவர் உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு மிக பிரமாண்டமான முறையில் காதணி விழா நடத்தி இருந்தது. மேலும் இந்த விழாவை தங்களது இணைய பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் அவரது மகன் மற்றும் மகளை பார்த்த பலரும் அட இவங்களுக்கு பெரிய குழந்தைங்க இருக்கா என பலரும் வியந்து போனதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்………..