சமீபத்தில் இணையத்தில் மற்றும் மக்கள் மத்தியில் வேற லெவல் ஹாட் டாப்பிக்காக இருப்பது ஜெயிலர் திரைப்படம் இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைபடம் தான் ஜெயிலர். ஜெயிலர் படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது இப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது எனவே கூறலாம். அந்த வகையில் இயக்குனர் நெல்சன் அவர்கள் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியுள்ளார்.

இதை தொடர்ந்து இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகனாக நடித்தவர் வசந்த் ரவி. தற்பொழுது தமிழ் சினிமாவில் மிக திறமையான புது முக நடிகர்கள் வர தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில் நடிகர் வசந்த் ரவியும் ஒருவர் என கூறலாம். ஜெயிலர் படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். இவரது நடிப்பை பார்த்து பல இயக்குனர்கள் தங்களுடைய படங்களில் நடிக்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் இணைய தளத்தில் பரவி கொண்டிருக்கின்றன.

இதை வைத்து பார்த்தால் நடிகர் வசந்த் ரவி அவர்களை வருங்காலத்தில் நிறைய தமிழ்ப் படங்களில் பார்க்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் தற்பொழுது நடிகர் வசந்த் ரவி ஒரு மிக பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் என தெரியவந்துள்ளது. தமிழ் நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இடங்களில் இயங்கிவரும் வசந்த் பவன் ஹோட்டல் லின் உரிமையாளர் ரவி முத்துகிருஷ்ணன் அவர்களின் மகன் தான் நடிகர் வசந்த் ரவி. வசந்த் ரவி

அவர்கள் இங்கிலாந்தில் ஹெல்த் கேர் மேனேஜ்மென்ட் என்னும் அடிப்பை முடித்து விட்டு அப்பலோ மருத்துவமனையில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பிறகு சினிமாவின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தால் சினிமாத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். வசந்த் ரவி அவர்கள் பல படங்களில் நடித்து சினிமா துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்……