இன்றைய காலகட்டத்தில் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலரும் வாரிசு நடிகர்களாக இருந்து வருகின்றனர் இறுப்பினும் இதில் பலரும் தங்களது பிரபலத்தை தாண்டி தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம்

சிவாஜி கணேசன் அவர்களின் பேரன் என்ற அடையாளத்துடன் விக்ரம் பிரபு கும்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 2012ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வெளியான கும்பி படத்தில் விக்ரம் பிரபுவை தாண்டி லட்சுமி மேனன், தம்பி ராமையா, அஸ்வின் ராஜா போன்ற பல நடிகர்கள் நடித்தார்கள். இந்த படத்தில் உண்டியல் என்ற கதாபாத்திரத்தில் அஸ்வின் ராஜா நடித்து நல்ல வரவேற்பு

பெற்றார். அப்படத்தை தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் போன்று பல படங்களில் தொடர்ந்து நடித்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் யார் என பலரும் குழம்பி வந்த நிலையில்  தற்போது அஸ்வின் ராஜா யார் என்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இந்நிலையில் பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் பட அதிபர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது…………………………