திரையுலக பிரபலங்கள் பலரும் சினிமாவில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவு கவனம் செலுத்தி வருறம் நிலையில் கடந்த சில மாதங்களாக சினிமா பிரபலங்கள் தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இந்த நடிகரை பற்றி சில விஷயங்கள் கூறினாலே யார் என்பது கண்டுபிடித்து விடுவீர்கள். ஜிகர்தண்டா என்ற

படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது எல்லாம் பெற்றார், அப்படத்தில் இவரின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் குவித்தது. அதன்பிறகு நிறைய படங்கள் தொடர்ந்து நடித்து வந்த பாபி சிம்ஹாவிற்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் அளவிற்கு முக்கிய படங்கள் எதுவும் அமையவில்லை. படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம்

செய்துகொண்டார். பிரபலங்கள் அனைவரும் தங்களது சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு வர இப்போது பாபி சிம்ஹாவும் தனது இன்ஸ்டாவில் 7ம் வகுப்பு படிக்கும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு மெமோரீஸ் என பதிவிட்டுள்ளார். அவரின் சிறுவயது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம கியூட்டாக உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பாபி சிம்ஹாவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………….