கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தளபதி விஜய்  நடிப்பில் லியோ படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அடுத்த படமாக  விஜய் – வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் யுவன் ஷங்கர்

ராஜா இசையமைக்கிறார். மேலும் பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா, சினேகா, மீனாக்ஷி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் விரைவில்

வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தளபதி 68 பட தலைப்பின் முதல் எழுத்து ‘M’ என்ற வார்த்தையில் தான் துவங்கும் என லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. M என்ற வார்த்தையில் அப்படி என்ன தலைப்பை தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபு வைத்துள்ளார் என ரசிகர்கள் கேட்டு

வருகிறார்கள். மேலும் M வார்த்தையில் உள்ள விஜய்க்கு ஏற்றபடியான தலைப்புகளை ரசிகர்களே கமெண்ட் செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி  அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………..