கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி படம் கடந்த செப்டம்பர் 14ம் தேதி தமிழில் ரிலீஸ் ஆனது. ஹிந்தியில் தாமதமாக செப்டம்பர் 28ம் தேதி தான் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள்

என விஷால் அதிர்ச்சி புகார் கூறி இருந்தார். விஷால் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷாலின் உதவியாளரிடம் நேற்று 9 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில் நடிகர் விஷால் இன்று மும்பை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி

இருக்கிறார். “என் வாழ்க்கையில் சிபிஐ விசாரணைக்கு எல்லாம் செல்வேன் என நினைத்து கூட பார்த்ததில்லை” என விஷால் ட்விட்டரில் கூறி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ வெளியானதை அடுத்து பலரும் இதற்கு பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்………………….