,தற்போது சினிமாவில் பல துறைகளை சார்ந்தவர்களும் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் காமெடி  நடிகராக தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு ஹீரோ, இயக்குனர் , தயாரிப்பாளர் என பல துறைகளில் அசத்தி வருபவர் பிரபல முன்னணி நடிகர் சந்தானம் . இந்நிலையில் இவரது டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாபெரும் எதிர்பார்ப்பில் சந்தானம்

நடிப்பில் கடந்த வாரம் 80ஸ் பில்டப் திரைப்படம் வெளிவந்தது. கல்யாண் இயக்கிய இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆனந்த்ராஜ், கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எதிர்பார்த்த அளவிற்கு இப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பது பெறவில்லை. வசூல் ரீதியாகவும் இப்படம் ஆவெரேஜ் தான் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்,

இப்படத்தில் நடிப்பதற்காக சந்தானம் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 80ஸ் பில்டப் படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 கோடி வரை சந்தானம் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த தகவல்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் வாயடைத்து போனதோடு படம் வெற்றி பெற வாழ்த்துகளை கூறி வருகின்றனர்…………………