தமிழ் சினிமாவின் அடையாளமாக தற்போது வரை பார்க்கப்படுபவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி தான். அடுத்தடுத்த தலைமுறையினர் சினிமாவை ஆட்கொண்டாலும் இவர்களின் பெயர் தற்போது வரை நிலைத்து நிற்கிறது. எம்ஜிஆர் சினிமாவில் எவ்வாறு பெயர் பெற்றாரோ அதேபோல் அரசியலிலும் அரியணை ஏறினார்.

மேலும் சிவாஜிக்கு இணையான நடிகர் தற்போது வரை யாரும் இல்லை என்ற பெயர் உள்ளது. இந்த சூழலில் சிவாஜி, எம்ஜிஆர் வாழ்ந்த நாட்களை விட அதிக காலம் வாழ்ந்தவன் நான் என பெருமையாக கூறியிருக்கிறார் நடிகர் சிவகுமார். அதாவது சிவாஜி, எம்ஜிஆருக்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்ட நடிகர்கள் என்றால் ரஜினி, கமல் தான்.

ஆனாலும் இவர்கள் காலத்தில் ஹீரோவாக பயணித்த சிவக்குமாருக்கும் ஓரளவு நல்ல ரசிகர்கள் இருந்தனர். ஒழுக்கமாகவும், கண்ணியமாகவும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று பலருக்கும் முன் உதாரணமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் யோகா, சாப்பாடு முறைகளால் இப்போதும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

இந்த வயதிலும் யோகாசனம் ஆகியவற்றால் தனது உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். மேலும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார், எம்ஜிஆர் சிவாஜி ஆகியோர் 70 வயதுக்குள்ளாகவே இறந்து விட்டனர். அவர்கள் பல சாதனைகள் செய்து இருக்கின்றனர்.

ஆனாலும் அவர்களைத் தாண்டி இப்போது 82 வயது வரை ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் யோகா என்று சிவகுமார் கூறியிருக்கிறார். அதனால் தான் சிவக்குமாருக்கு மார்க்கண்டேயன் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. மமாணவர்களுக்கு தொடர்ந்து யோகா, உடற்பயிற்சி பயணங்களை சிவகுமார் சொல்லி வருகிறார்.