சித்திக் இயக்கத்தில் விஜய், அசின் ஜோடியாக நடிக்க கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காவலன். இந்த படம் மலையாளத்தில் வெளியான Bodyguard என்ற படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான இப்படம் மொத்தமாக ரூ. 102 கோடி வரை வசூலித்துள்ளது.

இப்படத்தில் விஜய் தனது வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்தில் அசினுக்கு நெருங்கிய தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மித்ரா சூரியன். 2008ம் ஆண்டு தமிழில் சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின் சூரியன், சட்டக்கல்லூரி, கந்தா, புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருந்தார். பட வாய்ப்புகள் குறைய இவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது அவர் கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அதற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.