திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் சிம்பு. இவருக்கு குரலரசன் எனும் ஒரு தம்பி இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். இவர் இசையில் ஆர்வம் கொண்டவர் ஆவார்.

இஸ்லாம் மதத்திற்குமாறிய குரலரசன் அதே மதத்தை சேர்ந்த நபீலா என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நபீலா கடந்த சில நாட்களுக்கு முன் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

சிம்புவின் தங்கையான இலக்கியாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகன் பிறந்ததன் மூலம் மாமாவானார் சிம்பு. அவ்வப்போது தனது மருமகனுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை கூட சிம்பு வெளியிடுவார்.இந்த நிலையில் தற்போது தனது தம்பிக்கு குழந்தை பிறந்துள்ளதன் மூலம், பெரியப்பாவாகி இருக்கிறார். இதற்காக ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.