நடிகை ரேகா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் அண்மையில் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நாயகியாக தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளவர் ரேகா. 1986-இல் பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் படத்தில் ஜெனிபர் டீச்சர் கதாபாத்திரத்தில் அறிமுகமான ரேகா, அதனை தொடர்ந்து அதே ஆண்டில் மாபெரும் ஹிட்டடித்த “புன்னகை மன்னன்” படத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து எண்ணற்ற ஹிட் படங்களில் நடித்த ரேகா, கடந்த 1996-ஆம் ஆண்டு ஹாரிஸ் என்பவரை திருமண செய்து கொண்டார். பின்னர், மீண்டும் படங்களுக்கு திரும்பிய அவர், 2006-ஆம் ஆண்டில் ஒளிபரப்பான மிகவும் ஹிட் தொடரான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தான் தற்போது 53 வயதாகும் அவர், கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது. நடிகை ரேகா தற்போது புதுமுக இயக்குனர் மாலதி நாராயணன் இயக்க இருக்கும் மிரி அம்மா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தான் ரேகா வயதான நிலையிலும் கர்ப்பமாகுவதாக நடித்துள்ளார். அப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.