பிரிகிடா சாகா

யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. இவர் பிளாக்‌ஷிப் யூடியூப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடர் மூலம் தான் பிரபலமானார்.அந்த தொடரில் இவர் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேலையில் செம்ம ஹோம்லி லுக்கில் தன் அழகான நடிப்பால் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார் பிரிகிடா.

நடிகை சாய் பல்லவியை எப்படி மலர் டீச்சர் கதாபாத்திரம் பேமஸ் ஆக்கியதோ, அதேபோல் பிரிகிடாவை பவி டீச்சர் கதாபாத்திரம் பிரபலமாக்கியது. ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பிரிகிடாவில் நடிப்பை பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பும் தேடி வந்தது. முதலில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தார் பிரிகிடா.

விஷாலின் அயோக்கியா, விஜய்யுடன் மாஸ்டர், முகென் ராவின் வேலன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரிகிடா, பின்னர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

அவர் இயக்கிய இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவுக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பவி டீச்சரா இது..?

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ஹீரோயினி வாய்ப்பை பெறுவதற்காக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமும் உள்ளது என கூறலாம்.