பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கப்படும் நிலையில் இந்த சேனலில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பலரும் பலத்த ரசிகர்களாக இருந்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி இல்லத்தரசிகளை

கடந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவரும் வகையில் இருந்து வருகிறது இதற்கு காரணம் வெறும் சமையலை மட்டுமே மையமாக வைத்து இல்லாமல் அதனுடன் நடக்கும் நகைச்சுவை மக்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை விஜே ரக்ஷன் தொகுத்து வழங்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக முன்னணி சமையல் கலை ஜாம்பவான்களான சீப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் நடுவராக இருந்து வருகின்றனர். இதில்

செப் தாமு அவர்கள் பலதரபட்ட சமையல்களை செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளதோடு பல சமையல் கலைஞர்களை உருவாக்கி உள்ளார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு திருமணமாகி மகள் ஒருவரும் உள்ளார் அவரது பெயர் அக்ஷயா தாமோதரன் அவர் தற்போது மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராக லண்டனில் செட்டில் ஆகி அங்கு பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரது மகள்

குறித்து யாருக்கும் அவ்வளவாக தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் தனது மகளை பார்ப்பதற்கு தாமு அவர்கள் லண்டன் சென்று இருந்த நிலையில் அங்கு அவருடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் அவரது மகளை பார்த்த பலரும் என்னது இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என பிரமித்து போனதோடு அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்…….

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Damodaran Kothandaraman (@chef_damu)