தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் களவானி இந்த படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் விமல். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் இந்த படத்தின் மூலம் அவருக்கு திரையுலகில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது எனலாம். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த போதிலும்

அவருக்கு எதிர்பார்த்த வரேவேற்பும் பிரபலமும் கிடைக்கவில்லை எனலாம் இதனைதொடர்ந்து கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒடிடி இணைய தளத்தில் விலங்கு வெப் சீரியஸ் மூலமாக மீண்டும் ரீன்ட்ரி கொடுத்து இருந்தார். இதையடுத்து தற்போது பட வாய்ப்புகள் கணிசமாக வரும் நிலையில் நடிகர் விமல் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக பல தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விசாரிக்கையில் விமல் நெஞ்சு வலி காரணமாக

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் மேலும் அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியதோடு அவர் போதைக்கு அடிமையாகி அதற்காக வீட்டிலேயே ரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் பல தகவல்கள் வந்தது. இதையடுத்து இதற்கு விளக்கம் கொடுத்த விமல் இதுபோன்று வரும் அணைத்து தகவல்களும் முற்றிலும் பொய்யானவை என ரத்தகறையுடன் படபிடிப்பில் இருக்கும் படி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் விமல். அதில் நான் தற்போது அறிமுக இயக்குனர்

மைக்கேல் இயக்கம் பபுதிய படம் ஒன்றில் நடித்து வருகிறேன் இப்படி இருக்கையில் எனக்கு வேண்டாத விசக்கிருமிகள் பலரும் இதுபோன்ற வதந்திகளை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இதுமாதிரியான சின்னபுள்ள தனமான வேலைகளை விட்டுவிட்டு உருப்படியான வேலைகளை பாருங்கள் என வேதனையுடன் கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரப்பரை ஏற்படுத்தி வருகிறது….