திரையுலகில் பொறுத்தவரை தற்போது அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தங்களை பிரபலபடுத்தி கொள்ளும்  நோக்கில் எந்த எல்லைக்கும் சென்று வருகின்றனர் அதிலும் நடிகைகளை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு பல வித்தைகளை அசால்டாக செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இளம் நடிகை கர்ப்பமாக இருக்கும் நிலையில் வயிற்றில் குழந்தையுடன் தலைகீழாக யோகாசனம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரளாகி

வருகிறது. இந்நிலையில் திரையுலகில் தொகுப்பாளினியாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன். இதையடுத்து பல மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் துணை நாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கிரேக் எனும் விஜேவை திருமணம் செய்து கொண்டதை அடுத்து சில காலமே போன

இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2017-ம ஆண்டு விவாகரத்தில் போய் முடிந்தது. இதையடுத்து சில காலம் தனிமையில் இருந்து வந்த பூஜா பின்னர் பிரபல நடிகரான ஜான் கேக்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சார்பட்டா பரம்பரை, வீரம், பாகுபலி, கேஜிஎப் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட

நிலையில் தற்போது பூஜா கர்ப்பமாக உள்ள நிலையில் தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கர்ப்பமாக இருக்கும்போதே தலைகீழாக நின்றபடி போஸ் கொடுத்தபடி மை லிட்டில் ஒன் உன்னை சந்திக்க தயராக உள்ளேன் எனவும் பதிவிட்டிருந்தார். இதனைதொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……