தமிழ் சினிமாவில் இன்றைக்கு புதுமுகங்களாக எத்தனையோ இளம் இயக்குனர்கள் வந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் அடித்தளமாக அந்த காலத்திலேயே பல முன்னணி திரை பிரபலங்களை திரையுலகிற்கு அறிமுகபடுத்தியதோடு பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் ஒரு

படத்திலாவது நடிக்கமட்டோமோ என ஏங்கிய நடிகர்கள் நடிகைகள் ஏராளம். அந்த அளவிற்கு தனது இயக்கத்தில் மூலம் ஒரு சிருகல்லையும் தனது படத்தில் நடிக்க வைத்திருப்பார். இவ்வாறு பிரபலமாக பல படங்களை இயக்கி வந்த பாரதிராஜா அவர்கள் தற்போது படங்களை இயக்குவதை தாண்டி பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான

திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைதொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் பாரதிராஜா அவர்களுக்கு திருமணமாகி மனோஜ் மகன் ஒருவர் உள்ளார். இவரும் அந்த காலத்தில் இருந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையிலும் போதிய பிரபலம் கிடைக்காத நிலையில் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நந்தனா என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இதனைதொடர்ந்து சமீபத்தில் தனது மனைவியின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடிய மனோஜ் பிறந்தநாள் விழாவில் எடுத்த பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் மனோஜின் மனைவியை பார்த்த பலரும் இவங்கதான் பாரதிராஜாவின் மருமகளா என வியந்து பார்த்து வருகின்றனர்…..