தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தையும் தனி ஒரு ரசிகர் கூட்டத்தையும் திரளாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார். இந்நிலையில் இவரது படங்கள் எப்போது திரையில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றதை

அடுத்து மீண்டும் அதே கூட்டணியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வருவதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் அவர்கள் அடுத்ததாக பிரபல முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். இதனைதொடர்ந்து இந்த படத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம்

தயாரிக்க பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நயன்தாரா நடிகக்வுள்ளதாக கூறி வந்த நிலையில் அவர் வேறு படங்களில் பிசியாக உள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் தற்போது அதுவும் இல்லை எனும் நிலையில் யார் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என பலரும் யூகித்து வரும்

நிலையில் இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகையும் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதையடுத்து இது குறித்து படக்குழு வசம் விசாரிக்கையில் அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து இந்ததகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது……