தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா இந்நிலையில் கடந்த சில வருடங்களில் மட்டும் அம்மிணியின் பிரபலமும் மார்க்கெட்டும் எகிற தொடங்கியது எனலாம் அந்த அளவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் அம்மினிக்கு ஹீரோயின் வாய்ப்புக்கள் குவிய தொடங்கியது எனலாம்

இதையடுத்து பிசியாக பல படங்களில் நடித்து வந்ததை தொடர்ந்து தனது சம்பளத்தையும் கோடிகளில் உயர்த்தி உச்சத்தில் இருந்த சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் தனக்கு மையோசிடிஸ் எனும் மர்ம நோய் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் அதில் பதிவிட்டிருந்தார்.

இதனைதொடர்ந்து அந்த நோயின் தாக்கம் துளியும் குறையாத நிலையில் தொடர்ந்து அதற்கான சிகிச்சையில் இருந்து வரும் சமந்தா சமீபத்தில் கூட மேல்சிகிச்சைக்காக தென்கொரியா சென்று வந்ததை அடுத்து இனி படங்களில் நடிகக்போவதில்லை என கூறியதோடு தனது வீட்டிலேயே [படுத்த படுக்கையாக முடங்கி கிடக்கிறார். இருப்பினும் சமூகவளைதலங்களின் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வரும் சமந்தா

அடிக்கடி சில பதிவுகளையும் புகைப்படங்களையும் பதிவிட்டு அவரது ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைபடம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது ஜிம் கோச்சுடன் மிரர் செல்பி எடுத்த புகைபடத்தை பதிவிட்டுள்ளார் இதையடுத்து இதை பார்த்த பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வருவதோடு விமர்சனங்களை அள்ளி தெளித்து வருகின்றனர்………