தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவில் படங்களில் நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவின் மூலமாக பிரபலமானவர்களே அதிகம் எனலாம் இந்நிலையில் திரை பிரபலங்கள் பலரும் கூட இணையத்தின் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்ள எண்ணி தங்களது சிறுவயது மற்றும் குழந்தைபருவ புகைப்படங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் அண்மையில் இணையத்தில் சிறுவன் ஒருவரின் புகைப்படம் வெளியாகி திரையுலக வாசிகள் மத்தியில் செம

வைரளாகி வருகிறது . அந்த புகைபடத்தில் முழித்தபடி இருக்கும் சிறுவன் யாரென தெரிகிறதா அது வேறு யாரும் இல்லை கடந்த சில வருடங்களில் பல முன்னணி நடிகர்களையும் வைத்து பல மாறுபட்ட கதைகளை பிரமாண்ட படங்களை இயக்கி உலகளவில் வெகு பிரபலமாகி இருக்கும் பிரபல முன்னணி இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் அது . தனது கல்லூரி படிப்பை முடித்து வங்கியில் பணிபுரிந்து வந்த நிலையில் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த

வேலையை விடுத்து முதலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த மாநகரம் படத்தின் மூலமாக தனது திரைபயணத்தை தொடங்கினார். தனது முதல் படத்திலேயே மாறுபட்ட கதை மற்றும் இயக்கத்தால் இளைஞர்கள் முதல் திரையுலகம் வரை பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நிலையில் அடுத்த படமாக கார்த்தி ஹீரோவாக நடிக்க முற்றிலும் வேறுகோணத்தில் கைதி படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டு இருந்தார். மேலும் தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி அதிலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது இருந்ததை

அடுத்து இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்த பிரமாண்ட படைப்பாக உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களை விக்ரம் படத்தை இயக்கிருந்தார். இந்த படம் இவருக்கு உலகளவில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்ததோடு முன்னணி இயக்குனர்களின் மத்தியில் தனியொரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜயின் கூட்டணியில் தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது……