தற்போது மக்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளனர். இந்நிலையில் அசீம், விக்ரமன், ஷிவின், மைனா, அமுதவாணன் ஆகியோர் பைனல் நோக்கி போட்டிபோட்டு வரும் நிலையில் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்தா சீசனில் பல மாறுதல்களை கொண்டு

வந்த பிக்பாஸ் அவர்கள் இம்முறை இரண்டு முறை பணபெட்டிகளை வைத்ததை முதல் முறை வைத்த மூன்று லட்சம் பணமூட்டையை கதிரவன் எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இரண்டவதாக பிக்பாஸ் அதேபோல் மூன்று லட்சத்துடன் பணபெட்டியை வைத்தது மட்டுமின்றி அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கும் கூறிய நிலையில் பணபெட்டியின் மதிப்பு சுமார் 13 லட்சத்தை எட்டிய நிலையில் அமுதவாணன் இம்முறை பணபெட்டியை

எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார். இதனைதொடர்ந்து மீதம் நான்கு போட்டியாளர்களில் யார் டைட்டிலை வெல்ல போகிறர்கள் என பலரும் எண்ணி வந்த நிலையில் பிக்பாஸ் இந்த முறை புதிய திருப்பமாக ஸ்பாட் எவிக்சனை கொண்டு வந்ததை அதன் மூலமாக மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியே அனுப்பபட்டு உள்ளார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 103 நாட்கள் மைனா நந்தினி இருந்த நிலையில் அவர் வாங்கிய மொத்த சம்பளம் குறித்த

தகவல்கள்  சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி மைனா நந்தினி பிக்பாசில் கலந்து கொள்ள ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேசப்பட்ட நிலையில் மொத்தம் அவர் பிக்பாசில் 103 நாட்கள் இருந்ததை அடுத்து மொத்தமாக 26 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல்கள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…….