சின்னத்திரையில் பிரபல முன்னணி தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதொடு அதில் கலந்து கொள்ளும் பலரும் பலத்த பிரபலத்தைஏற்படுத்தி கொண்டு தற்போது திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் எனலாம். இந்நிலையில் இந்த சேனலில் கடந்த மூன்று சீசன்களாக வெளியாகி பலரது மனதை கொள்ளை கொண்ட முன்னணி

ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் போட்டியை மையமாக கொண்ட இந்த நிகழ்ச்சி உலகளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளது எனலாம். இதற்கு காரணம் வெறுமனே சமையலை மட்டும் மையமாக இல்லாமல் நகைச்சுவை கலந்து இருக்கும் பட்சத்தில் இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. இதையடுத்து இந்த

நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த சீசனில்  போட்டியாளர்களாக ஸ்ருஷ்டி டாங்கே, ஆண்ட்ரினே நௌரைட், ஷெரின், ராஜ் ஐயப்பா,பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஜே

விஷால், காளையன், விசித்ரா, கிஷோர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ள நிலையில் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…….