தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களில் பல முன்னணி நடிகைகளையும் பின்னுக்கு தள்ளி பலத்த முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில்  முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளத்தை வாங்கி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தவர் பிரபல ,முன்னணி நடிகை சமந்தா. இவ்வாறு பிரபலமாக பல

படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் புகைபடத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் தனக்கு மயோ சிட்டிஸ் எனும் மர்ம நோய் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து அதற்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையிலும் அதன் தாக்கம் சற்றும் குறையாத

நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்சிகிசைக்காக தென்கொரியா சென்று வந்தார். இருப்பினும் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில் படங்களில் நடிப்பதை தவிர்த்து வீட்டிலேயே இருந்தபடியே அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக

இருக்கும் அம்மிணி அடிக்கடி சில வீடியோக்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ஜிம்மில் வொர்கவுட் செய்யும் படி உள்ள சமந்தாவை பார்த்த பலரும் வியந்து போனதோடு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…….

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)