திரையுலகில் பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக போதாத காலமாக இருந்து வருகிறது எனலாம் அதற்கு ஏற்ப தொடர்ந்து பல முன்னணி சினிமா பிரபலங்களும் காலமாகி வருவது  சினிமா உலகை தாண்டி அவரது ரசிகர்களான மக்கள் பலரையும் பலத்த சோகத்தில் ஆழ்த்தி வருகிறது எனலாம் மேலும் இந்த நிலை தற்போது அதிகரித்து வரும் நிலையில் நாளுக்குநாள் சினிமா பிரபலங்கள் காலமாகி வரும் தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது. இப்படி இருக்கையில் தற்போது மேலும் ஒரு

முன்னணி பிரபலம் ஒருவர் காலமாகியுள்ள தகவல் இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 80களின் காலத்தில் தொடங்கி இன்றளவு வரை பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக இருந்து வந்தவர் பிரபல முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம். இவர் அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி ரஜினி, கமல் என பல

முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக இருந்ததோடு பல சண்டை காட்சிகளில் நடித்தும் உள்ளார் மேலும் சமீபத்தில் தளபதி விஜய் உள்பட பல நடிகர்களின் படங்கள் வரை தொடர்ந்து ஸ்டன்ட் மாஸ்டராக இருந்து வந்த நிலையில் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழிப்படங்களில் ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இவ்வாறு இருக்கையில் 93 வயதாகும்

நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் வயதுமூப்பு காரணமாக காலமானார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பல முன்னணி பிரபலங்களும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருவதோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்……..