தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகர்கள் தொடர்ந்து புதிதாக வந்த வண்ணம் இருப்பதோடு படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்ள போராடி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பாய்ஸ் படத்தின் மூலமாக கதாநாயனாக தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சித்தார்த். இந்தா படத்தை தொடர்ந்து பல

படங்களில் ஹீரோவாக நடித்து வரும் போதிலும் இவருக்கு இன்னமும் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சில பதிவுகளையும் கருத்துகளையும் பதிவிட்டு அதன் மூலமாக பிரபலமாகி வருவதோடு பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவ்வாறு இருக்கையில் சித்தார்த் தற்போது சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்

படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க சித்தார்த் கடந்த சில மாதங்களாக பிரபல இளம் நடிகையான அதிதி ராவுடன் நெருக்கமாக இருந்து வருவதகா பல தகவல்கள் கசிந்தா வண்ணம் இருந்தது. இதனைதொடர்ந்து இருவரும் இணைந்து மகா சமுத்திரம் எனும் படத்தில் ஜோடியாக நடித்திருந்த நிலையில் பழக்கம் ஏற்பட்டு அது  காதலாக மாறியிருக்கலாம் என

பலரும் தங்களது கருத்துக்களை கூறி வரும் நிலையில்  சமீபத்தில் சித்தார்த் தனது இணைய பக்கத்தில், என் இதயத்தின் இளவரசியே என பதிவிட்டிருந்த நிலையில் இருவரும் இணைந்து பிரபல தெலுங்கு ஹீரோ ஷர்வனந்தின் நிச்சயதார்த்த விழாவில் ஜோடியாக கலந்து கொண்டு அவர்களது காதலை உறுதிபடுத்தியுள்ளனர். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……